கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட 13 லட்சம் ரூபாயில் 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் செயல் அலுவலர் கந்தசாமி, உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, இளநிலை பொறியாளர் போஸின், ஒப்பந்ததாரர் ஜெயசிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.