அருமனை அருகே கடையால் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ் மகன் ஆரோன் ஜோஸ் (4) என்ற எல்கேஜி மாணவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதேபோல், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் லியோ அனில் என்ற மாணவனும் காய்ச்சலால் உயிரிழந்தான். இதனால், சுகாதாரத் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.














