கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதலாக 585 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதைக்கு 70 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.














