சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை மூன்று நாட்களில் சுமார் 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் தகவலின்படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,500 டிக்கெட்டுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.














