இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் ஒருவர் தனது வீட்டருகே தேங்கியிருந்த குப்பைகளுக்கு நேற்று தீ வைத்தபோது, பலத்த காற்றில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நான்கு படகுகளில் தீப்பற்றி எரிந்தது. கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தாலும், 4 படகுகளும் எரிந்து நாசமாகி, பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












