கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதிலும், தற்கொலை செய்துகொண்டதாலும் மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்தபோது திடீர் உடல்நலக்குறைவால் 57 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், ரயில்வே போலீசார் பொதுமக்கள் தண்டவாளப் பகுதிகளில் நடந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.














