குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் அதிகாரிகள், 16-ம் தேதி அதிகாலை தக்கலை, குமாரகோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சொகுசு காரை துரத்தி பிடித்தனர். காரில் இருந்த 3 பேர் தப்பி சென்றனர். காரில் இருந்து சுமார் 1700 கிலோ ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உடையார் விளை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.