தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குழித்துறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி அலுவலகம் காமராஜர் பவனை நேற்று திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, இந்த கல்வி கொள்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, பொதுப் பட்டியல் கல்விக் கொள்கை உள்ளது. மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து முடிவு செய்ய வேண்டும். முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி முன்மொழிந்த மும்மொழிக் கொள்கையை நவோதயா பள்ளிகளில் தமிழகத்தில் எதிர்த்தனர். அதற்காக மத்திய அரசு நிதி வழங்க மாட்டோம் என எப்போதும் கூறவில்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தமிழக முதல்வரின் குரல் அது, தமிழக மக்களின் குரல். பழிவாங்கும் விதமாக நிதி வழங்க மாட்டோம் என்றால் அது ஆணவத்தின் உச்சம். இது மத்திய அரசின் கூட்டாட்சியின் தத்துவத்தை மத்திய அரசு மீறுவதாகும் என கூறினார். பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங், விஜய் வசந்த் எம்பி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, தாரகை கத்பட் எம்எல்ஏ, பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.