Home கன்னியாகுமரி செய்திகள் குழித்துறை:   ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது

குழித்துறை:   ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது

0

குழித்துறை அருகே நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் பாதையில் குருமத்தூர் என்னும் இடத்தில் ரயில்வே கேட்டுள்ளது. கடந்த வாரம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிளட்சன் (36) என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் பிளட்சனை சரமாரியாக தாக்கி, பொருட்களை உடைத்து, ரயில்வே பாதையில் இருந்த சிக்னலையும் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸ், களியக்காவிளை போலீசர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் போலீசார் விசாரித்து படுகாயமடைந்த பிளட்சனை குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்தனர். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சம்பவத்தில் ஈடுபட்டது காப்புக்காடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின், ராஜு, முஞ்சிறை பகுதியை சேர்ந்த சம்ஜோத் (25) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சம்ஜோத்தை நேற்று போலீசார் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version