முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்மஸ் விழா நேற்று (12-ம் தேதி) நடைபெற்றது. குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை ஏற்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வழங்கினார். தொடர்ந்து வாரிய உறுப்பினர்களை பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவித்தார். குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். மறை மாவட்ட செயலாளர் பேரருட்பணி அந்தோணி முத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். மறை மாவட்ட நிதி பரிபாலகர் பேரருட்பணி ஜெயக்குமார் பணியாளர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கினார். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.














