கடந்த 2011 ஆம் ஆண்டு குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சதாம் உசைன் கொலை செய்யப்பட்ட வழக்கில், திட்டுவிளை பகுதி செல்வசிங் மற்றும் குலசேகரம் பகுதி மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றம் 2017ல் இருவரையும் விடுதலை செய்த நிலையில், காவல்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 5000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.














