குலசேகரம், குற்றியாணி பகுதியைச் சேர்ந்த பால் வெட்டும் தொழிலாளி ஆபிரகாம் (44), நேற்று தனது வீட்டு அருகே உள்ள கோதையாறு இடது கரை கால்வாயில் குளிக்கச் சென்றார். அதிகளவு தண்ணீர் சென்ற கால்வாயில் குளிக்கக் குதித்த அவர் நீண்ட நேரமாக கரை ஏறாததால், அக்கம் பக்கத்தினர் அவரைத் தேடினர். சிறிது தூரத்தில் ஆபிரகாம் சடலமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














