குலசேகரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் குலசேகரம் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பைக்கை சரவணகுமார் நிறுத்த முயன்றார். ஆனால் பைக் வேகமாக சென்றதால் எதிர்பாராதவிதமாக பைக் எஸ்ஐ மீது மோதியது. மோதியதில் எஸ்ஐ மற்றும் பைக்கில் வந்த 2 பேர் என மூன்று பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனே போலீசார் எஸ்ஐ சரவணகுமார் மற்றும் பைக்கில் வந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.