குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜினு (35), தனது வீட்டுக்கு அருகில் உள்ள பாசன கால்வாய் தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 21) உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.