குலசேகரம் பகுதியை சேர்ந்த சபரிபாய் (77) என்பவரை அவரது மகன் மைக்கேல் தாசன் கடந்த 8.11.2016 அன்று கம்பியால் தாக்கிய வழக்கில், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி தனசேகரன், மைக்கேல் தாசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். காயமடைந்த தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.














