குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிள்ளைகளுடன் வசித்து வந்த மகாலட்சுமி கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென மாயமானார்.
பின்னர் மறுநாள் திரும்பி வந்தார். மீண்டும் 31ஆம் தேதி இரவு கணவர், பிள்ளைகளுடன் படுத்து உறங்கிய மகாலட்சுமி மறுநாள் பிள்ளைகளை விட்டுவிட்டு மீண்டும் மாயமானார். அப்போது வீட்டில் இருந்த ரூ.25,000ஐ அவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீடுகளில் அபினேஷ் மனைவியை தேடிப்பார்த்துள்ளார். ஆனாலும் மகாலட்சுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் அபினேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மகாலட்சுமியை தேடிவருகின்றனர்.














