குளச்சல் பகுதியில் இன்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற பழமையான வேப்பமரம் இரண்டாக பிளந்து முறிந்து விழுந்தது. இதில் வேப்ப மரம், சவுக்கு மரம் சாய்ந்து அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் போலீஸ் நிலைய கட்டிடத்தின் மேல் மாடியின் சுவர் மற்றும் முன்பக்க தாழ்வாரம் பகுதிகள் உடைந்து சேதமடைந்தது,
ஆனால் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த குளச்சல், திங்கள்சந்தை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி மரங்களை வெட்டி அகற்றினர். மரங்கள் முறிந்து விழுந்ததில் குளச்சல் பகுதியில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.