குளச்சல் கணேசபுரம் பகுதியில் அடைக்கலம் தந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் தலைவராக அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் (65) என்பவர் இருந்தார். தற்போது இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தங்கராஜுக்கும் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன்கள் சுதாகரன் (37) சுதன் (32) ஆகியோருக்கும் கோவில் பிரச்சனையில் தகராறு இருந்து வந்தது.
நேற்று (ஜூலை 14) சுதாகரன் மற்றும் சுதன் ஆகியோர் தங்கராஜை மிரட்டி காம்பவுண்டு சுவரை சேதப்படுத்தினர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













