குளச்சல்: விசைப்படகில் தவறி விழுந்த குமரி மீனவர் மாயம்

0
501

குளச்சல் அருகே கோடிமுனை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாசன் (45) மீன்பிடித் தொழிலாளி. இவர் கடந்த 27ஆம் தேதி கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஸ்ரீலால் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றார். 

கடந்த 30ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் பலத்த காற்று வீசியதாகத் தெரிகிறது. அப்போது படகில் இருந்த ஏசுதாசனை காணவில்லை. அவர் படகிலிருந்து தவறிவிழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோரப் பாதுகாப்புப் படை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. மாயமான ஏசுதாசனைத் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here