குளச்சலிலிருந்து குறும்பனை நோக்கிச் சென்ற மினி பஸ், குளச்சல் பீச் சந்திப்பில் எதிரே வந்த கார் மோதியதில் பஸ்ஸில் இருந்த சிறுமி மற்றும் காரில் இருந்த வினிஸ்டன், அவரது மனைவி உட்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராணி என்பவர் மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 6 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














