குளச்சல் சைமன் காலனி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் கையில் கம்புடன் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சுமார் 5 வீடுகளில் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தேவாலயத்திற்கு சென்ற ஒருவர் அவரை பார்த்து கேட்டதால் தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.














