குளச்சல் காமராஜர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்களின் ஆடைகளை நீக்கி சில்மிஷம் செய்யும் சிசிடிவி வீடியோ நேற்று வைரலானது. இது தொடர்பாக குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில், சில்மிஷம் செய்த அரசு பேருந்து ஓட்டுநர், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜவகர் என்பவரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.














