குளச்சல், மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியரும், தற்போது முட்டை வியாபாரமும் செய்து வந்தவருமான ஆன்றோ சேவியர் (68) என்பவர், வியாபாரத்திற்காக மொபட்டில் சென்றபோது திடீரென தலைசுற்றி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














