கேரளாவில் தொழில் செய்யும் குளச்சல் சுற்றுவட்டார விசைப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடமைக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தாக்குதல்கள் நடைபெறுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல் அனைவருக்கும் சொந்தமானது என்பதை வலியுறுத்தி, நாளை உலக மீனவர் தினமான 21ஆம் தேதி, சைமன்காலனி மீன்பிடி பயிற்சி நிலைய துணை இயக்குனர் அலுவலகம் முன்பு மாலை 3 மணி அளவில் விசைப்படகு உரிமையாளர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














