குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோணங்காடு பகுதியில் வசிக்கும் கொத்தனாரின் மகள் (17), ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய கொத்தனார், தனது மகள் காதலனுடன் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டைப் பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். பொதுமக்கள் இருவரையும் பிடித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.














