குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி மிகவும் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் தங்க நகைகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்துள்ளார். இதைக் கண்ட உடன் படிக்கும் தோழி இன்ஸ்டாவில் ஒரு ஆண் நண்பர் பெயரில் ஐடி உருவாக்கி மாணவியுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார்.
ஆண் நண்பர் என நினைத்து அந்த நபரை காதலித்தார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திய அந்தப் பெண் ஏராளமான நகைகளைப் பறித்தார். இது மாணவியின் தாயாருக்குத் தெரிந்து குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் (ஜூலை 12) பள்ளி மாணவியின் தோழி, அவரது தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.