குளச்சல், காந்தி சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது பூர்த்தியாகாத பிளஸ் 2 மாணவர் ஒருவர் பைக் ஓட்டி வந்தார். அந்த பைக் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கு சொந்தமானது. இதையடுத்து, சிறுவனுக்கு பைக் ஓட்ட அனுமதி அளித்த பைக் உரிமையாளர் கீழ்க்கரை பகுதியைச் சேர்ந்த மஞ்சு (25) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.














