குளச்சல், மரமடி பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (53), முற்போக்கு பெண்கள் கழக கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று, குளச்சலில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மீனவர் டல்லஸ் (58) என்பவர், முன்விரோதம் காரணமாக வெண்ணிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெண்ணிலா அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் டல்லஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














