குளச்சல்: சிறுவனைத் தாக்கி பைக் உடைப்பு… 3 பேர் மீது வழக்கு

0
173

குளச்சல், வாணியகுடியைச் சேர்ந்த ஒருவரின் 17 வயது மகன் நேற்று தனது மாமாவின் பைக்கில் குளச்சல் மீன் பிடித்துறை முகத்திற்குச் சென்றார். அங்கே அவர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஷெர்லின் (25) மற்றும் 2 வாலிபர்கள் சிறுவனிடம் தகராறு செய்து, ஆயுதங்களால் சிறுவனைத் தாக்கினார்கள். சிறுவன் தப்பி ஓட முயன்றபோதும் துரத்திச் சென்று தாக்கி, பைக்கைச் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த சிறுவன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குளச்சல் போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here