குமரி கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுவதைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் காமராசர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் குளச்சல் போலீசார் தவெக நிர்வாகிகள் டாக்டர் கிருஷ்ணகுமார், ஆண்டனி ராஜ், நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் உட்பட 200 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.