குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள் மீட்கப்பட்டனர். மாணவரை மீட்கும் பணியில் குளச்சல் போலீசார் மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.














