குழித்துறை: மறை மாவட்ட ஆயர் காலமானார் இன்று நல்லடக்கம்

0
16

குழித்துறை மறை மாவட்டத்தின் முதல் ஆயராக இருந்த ஜெரோம் தாஸ் வறுவேல் நேற்று (24ஆம் தேதி) சென்னையில் காலமானார். அவரது உடல் நேற்று மாலை குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று (25ஆம் தேதி) மாலை 3 மணிக்கு திருத்துவபுரத்தில் உள்ள மூவொரு இறைவன் பேராலயத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவரது உடல் பிற்பகல் 1 மணிக்கு குழித்துறை ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, இறுதி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here