கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளங்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் நேற்று குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனர்.
பின்னர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர், கிளீனரை பிடித்து விசாரித்தனர். அதே சமயத்தில், தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு செல்லும் மீன்கள் இருப்பதாக டிரைவர் கூறியுள்ளார். அது உண்மையா? என அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் மீன்கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்பினர். அபராதம் விதிக்கப்பட்டது.














