குழித்துறை: பொருள்காட்சி நிறைவு

0
128

குழித்துறை நகராட்சி சார்பில் 100வது வாவுபலி பொருள்காட்சி கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 20 நாள்கள் நடந்தது. நேற்று இரவு நிறைவு விழா பொருள்காட்சி திடலில் உள்ள விஎல்சி மண்டபத்தில் நடந்தது. நகரமன்றத் தலைவர் பொன். ஆசைதம்பி தலைமை வகித்தார். ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். இந்தப் பொருள்காட்சியில் கலைப்படைப்புகள், விவசாய பொருள்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here