குமாரபுரம் முதல் நிலை பேரூராட்சியில் குடிநீர் திட்ட பைப் லைன் நீட்டிப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்ததாரர் சுரேஷ் (52) பணியை தொடங்கவில்லை. பேரூராட்சி சார்பில் கடிதம் அனுப்பியும் அவர் வேலை பதிவு செய்யாததால், சம்பவ தினம் பேரூராட்சி அலுவலகம் சென்று பணியில் இருந்தவர்களை தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டார். பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா அளித்த புகாரின் பேரில், அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.