கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று தந்திரி சங்கரன் நம்பூதிரி தலைமையில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பொங்காலை, அம்மன் பவனி, பஜனை பட்டாபிஷேகம், அபிஷேக உறி விளையாட்டு ஆகியவை நடந்தன. இரவு யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி தலைமையில் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.














