கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் மேரா யுவ பாரத் சார்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தாளாளர் ராஜகுமார் போட்டிகளைத் துவக்கி வைத்தார். ஓட்டப்போட்டி, வாலிபால் போன்ற பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் அஜேஷ் மற்றும் ஷோபனா போட்டிகளை நடத்தினர்.