கொல்லங்கோடு அருகே அம்புலிகோணத்தில் உள்ள மலங்கரை கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், குரு மாணவன் போல் நடித்து வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த ₹2 லட்சத்தை திருடிச் சென்றார். தலைமை பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளே சென்ற அவர், தலைமை கன்னியாஸ்திரி உள்ளே சென்ற நேரத்தில் இந்த திருட்டில் ஈடுபட்டு தப்பிச் சென்றார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














