குமரி மேற்கு கடற்கரை சாலையில் கொல்லங்கோடு சுற்றுப் பகுதியில் இரவு வேளைகளில் சமூக விரோதிகள் சிலர் கேரளா தெரு நாய்களை கும்பலாக வாகனங்களில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர்.
இந்த நாய்கள் அணிவகுத்து அந்தப் பகுதிகளில் கோழிக் கறிக்கடைகளில் தங்கி விடுகின்றது. இப்படி கொண்டு வந்து விடப்படும் நாய்களால் பள்ளிக்கூடங்களில் செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே போலீசார் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.