மார்த்தாண்டம் அரசு துவக்கப்பள்ளியில் நேற்று பேரிடர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த வருவாய்த்துறையினர் சென்றனர். ஆனால், குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டிடத்தில் முகாம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருவாய்த்துறையிடம் சொந்தக் கட்டிடம் இருந்தும் பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.