கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள பழுதடைந்து காணப்படும் பல்வேறு சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடர்ந்து கோரிக்கை வைத்தன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு அரசால் முதல் கட்டமாக வார்டு 8-ல் உள்ள வெங்குளம் கரை கல்லுபொற்றை – சந்தனபுரம் சாலை, வார்டு 28-ல் உள்ள ததேயுபுரம் காலனி சாலை, வார்டு 30-ல் உள்ள வல்லந்தோட்டம் – சவரிகுளம் சாலை, வார்டு 32-ல் உள்ள நித்திரவிளை காவல் நிலையம் – வடக்கு குறுக்கு இணைப்பு – சமத்துவபுரம், கம்பர் தெரு – திருவள்ளுவர் தெரு சாலை, சமத்துவபுரம் முதல் தெரு – மேற்கு திருவள்ளுவர் தெரு சாலை, சமத்துவபுரம் இரண்டாவது தெரு – மேற்கு திருவள்ளுவர் தெரு ஆகிய சாலைகளை காங்கிரிட் தளம் அமைத்து சீரமைக்க ரூ.74.00 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.