கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதி சென்னிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (38). இவரது வீட்டு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் குளிப்பதை ஜெனிபர் அடிக்கடி எட்டிப் பார்த்து ஆபாச செய்கைகள் செய்வது வழக்கம். இது சம்பந்தமாக பெண்ணின் குடும்பத்தார் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஜெனிபர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று ஜெனிபரை கைது செய்தனர்.














