நித்திரவிளையருகே கொல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ரோசம்மாள் (75). கடந்த மாதம் 29ஆம் தேதி மதியம் அந்தப் பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, மஞ்சத்தோப்பு என்ற பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் ரோசம்மாளுக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுசம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 16) இரவு சிகிச்சைப் பலனின்றி ரோசம்மாள் உயிரிழந்தார். போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.