Home கன்னியாகுமரி செய்திகள் கொல்லங்கோடு: கல்லூரி டிரைவர் பைக் திருட்டு

கொல்லங்கோடு: கல்லூரி டிரைவர் பைக் திருட்டு

0

கிள்ளியூர், நெடியதட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரான வினோ (34) நேற்று காலை கொல்லங்கோடு பெட்ரோல் பங்கில் தனது பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றார். இரவு திரும்பியபோது, அவரது பைக் காணாமல் போனது. இது குறித்து வினோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் பைக்கை உருட்டிச் செல்வது பதிவாகி இருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version