கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (45) என்பவர், குடித்துவிட்டு வந்து தனது மனைவி ஜினியை (41) தாக்கியதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், கடந்த 31ஆம் தேதி இரவு மீண்டும் போதையில் பிரேம்குமார் தனது மனைவியை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.