கேரள தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஜயகுமார் (71) என்பவரின் கொல்லங்கோடு வீட்டில் இருந்து 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. பெங்களூருவில் வசிக்கும் விஜயகுமார் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தபோது இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. கொல்லங்கோடு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த அஜித் (27) என்பவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














