கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த வினு என்பவர், மகளின் திருமண விருந்துக்காக நேற்று மாலை கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதிக்கு 4 வேன்களில் சென்றார். இதில் ஒரு வேனில் 24 பேர் பயணம் செய்தனர். கொல்லங்கோடு அருகே மணலி பகுதியில் சென்றபோது, ஒரு பைக்கில் மோதி நிலை தடுமாறி வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் 18 பேர் காயமடைந்தனர். இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














