இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் கொல்கத்தாவில் இருந்து நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது. இதில் 166 பேர் பயணித்தனர்.
உ.பி. எல்லையில் விமானம் பறந்தபோது எரிபொருள் டேங்கில் கசிவு ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். உடனடியாக வாராணசி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு வாராணசியில் விமானம் தரையிறக்கப்பட்டது.