பொறியியல் பட்டதாரி சுஜின் (33), நித்திரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடு மற்றும் உரக்கள்ளச் சந்தை விற்பனை மூலம் ஊழல் நடப்பதாகக் கூறி பதாகையுடன் போராட்டம் நடத்தினார். நித்திரவிளை போலீசார் அவரை விசாரித்து, கூட்டுறவு சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவித்தனர்.