கிள்ளியூர் ஒன்றியம், நல்லூர் 5-வது வட்டார மாநாடு நேற்று நட்டாலம் தோழர். சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெற்றது. பெர்லின்ஜோஸ் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினர் நந்தகுமார் துவக்கவுரை ஆற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், நட்டாலம் பஞ்சாயத்து பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.